01.01.2000, Muthal Nimisham
By Rajeshkumar
5/5
()
About this ebook
Read more from Rajeshkumar
Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsSivappu November Rating: 0 out of 5 stars0 ratingsIruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsKondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Piriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsUyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsIrandhu Kidandha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsEngum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsMoondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Vivek, Vishnu, Oru Vidukathai! Rating: 3 out of 5 stars3/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsThanga Macham Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratings
Related to 01.01.2000, Muthal Nimisham
Related ebooks
1. 1. 2000 Mudhal Nimisham... Rating: 0 out of 5 stars0 ratingsThappithe Aaga Vendum Rating: 5 out of 5 stars5/5Sheela, Simla, Sirithu Rattham! Rating: 0 out of 5 stars0 ratingsMudhal Nimisham Rating: 2 out of 5 stars2/5Miss Preethi 545 Beach Road Mumbai Rating: 0 out of 5 stars0 ratingsOru Ponmaanai Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsUllur Sathigal Thani Rating: 0 out of 5 stars0 ratingsRattham Sinthum Rojakkal Rating: 0 out of 5 stars0 ratingsAabathukku Oru Azhaipithazh Rating: 1 out of 5 stars1/5Puthiya Paadal Paadu Rating: 5 out of 5 stars5/5Panivanbudan kettu Kolgiren Rating: 5 out of 5 stars5/5Welcome To Martuary Rating: 5 out of 5 stars5/5Nilavukkul Iruttu and Velvet Kanavugal! Rating: 5 out of 5 stars5/5Thik Thik Divya Rating: 5 out of 5 stars5/5Febuary - 30 Rating: 3 out of 5 stars3/5Sangamithirai Rating: 0 out of 5 stars0 ratingsCyanide Saamraajjiyam Rating: 5 out of 5 stars5/5Udaintha Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsThigil Kaalam Rating: 5 out of 5 stars5/5January Maranangal Rating: 4 out of 5 stars4/5Kuttrangal Kuraivathillai Rating: 5 out of 5 stars5/5Nerungathey Neruppu Rating: 5 out of 5 stars5/5Thazhambu Naagangal! and Irandavathu Mugam Rating: 0 out of 5 stars0 ratingsSivappu Nimisangal Rating: 0 out of 5 stars0 ratingsNaalaiya Vaanam Rating: 5 out of 5 stars5/5Pagai Enakku Pagai Rating: 0 out of 5 stars0 ratings25 Mani Nera Sorkkam and Nirkkatha Nimidangal! Rating: 0 out of 5 stars0 ratingsPuthu Yethiri Rating: 0 out of 5 stars0 ratingsThavanai Murayil Maranam Rating: 0 out of 5 stars0 ratingsFirst Flight to Paris Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for 01.01.2000, Muthal Nimisham
1 rating0 reviews
Book preview
01.01.2000, Muthal Nimisham - Rajeshkumar
22
1
ஏழு முப்பது ஆவதற்காகப் பரபரப்பாகக் காத்திருந்த மிருதுளா – கம்ப்யூட்டரிடம் ஓடினாள்.
அவள் குடியிருக்கும் ஃப்ளாட் மும்பை நகரத்தின் இடுப்புப் பகுதியில் – நானா செளக்கிற்கு அருகாமையில் பிரியும் கிளைச் சாலையில் இருந்தது.
சுவிட்சைத் தட்டிவிட்டு – கம்ப்யூட்டர் பூட் ஆவதற்காகக் காத்திருந்த மிருதுளா மோடம் கருவிக்கு உயிர் கொடுத்த பின் – இன்ட்டர்நெட் இணைப்புக்காக டயல் – செய்ய ஆரம்பித்தாள்.
"நாலாவது முயற்சியில் அவளுடைய கம்ப்யூட்டர் இன்ட்டர்நெட்டோடு இணைந்து கொள்ள – சேட் சர்வருக்குள் நுழைந்து – அரட்டை அறைகளின் பெயர்களை உன்னிப்பாய்ப் பார்வையிட்டுக் கொண்டு வந்தாள்.
Mrudhula - Damodhar’s Personal Chat Room
-இந்தப் பெயரைப் பார்த்தவுடன் மிருதுளாவின் முகம் மலர்ச்சிக்குப் போனது...
-டெல்லியிலிருக்கும் தாமோதரும், மிருதுளாவும் பேசிக் கொள்வதற்காக அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் அரட்டை அறை அது.
-இன்றைக்கு ஏழரை மணியிலிருந்து எட்டு மணிக்குள் அந்த ச்சேட் ரூமுக்கு வந்தால் பேசாலாம்’ என்று ஏற்கெனவே தாமோதர் ஈ-மெயில் கொடுத்திருந்தான்.
-ச்சேட் ரூம் காலியாக இருக்க – சின்ன ஏமாற்றம்.
–நேரம் பார்த்தாள் மிருதுளா.
-7.36.
எட்டு மணிக்குள் இந்த அரட்டை அறைக்கு வந்து இணைந்து கொள்வதாகத்தானே சொல்லியிருக்கிறான். இன்னும் எட்டு மணி ஆகவில்லை.
தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டு படபடப்புடன் காத்திருந்தாள் மிருதுளா.
எட்டு மணி ஆவதற்கு ஐந்து நிமிஷங்கள் இருக்கும் போது – மெம்பர்ஸ் பேனலில் தாமோதர் என்ற பெயர் தெரிந்தது.1
குப்பென்று மனசுக்குள் மகிழ்ச்சி எகிறியது.
அவன் கீ போர்டில் தட்டிய, ஹாய் மிருதுளா...
மிருதுளாவின் கம்ப்யூட்டரில் சட்டென்று விழுந்தது.
மிருதுளா பேசாமலே இருந்தாள்.
மிருதுளா...
இவள் மவுனம் சாதித்தாள்.
ஏய்... என் மேல கோபமா...?
ஆமா...
கோபத்துக்குக் காரணம் என்னவோ...?
அரை மணி நேரம் என்னை அலை பாய வெச்சிட்டிங்களே...?
டாண்ணு எட்டு மணிக்கெல்லாம் ஆஜர் ஆயிட்டேனே மிருதுளா...
நான் ஏழரையிலிருந்தே காத்திருக்கேன். நீங்க வேணும்ன்னே என்னைத் தவிக்கவிட்டிருக்கீங்க... என் மேல் சத்தியமடிச்சு உண்மையா இல்லையான்னு சொல்லுங்க...
உன் மேல் சத்தியமா சொல்றேன்... நான் உன்னை வேணுமின்னேதான் தவிக்கவிட்டேன். இன்ட்டர்நெட் ச்சேட்டிங்ல இருந்தாலும் உன்னோட கோபத்தைச் சீண்டிவிட்டு வேடிக்கை பார்க்க எனக்கு ரொம்பப் பிடிக்கும்..."
யூ நாட்டி...
இதைச் சொல்லறப்போ உன்னோட மூஞ்சி பேபி பிங்க் நிறத்துக்கு மாறுமே... அதைப் பார்க்கணும்ன்னு ரொம்ப ஆசையா இருக்கு...
அதைப் பார்க்கணும்ன்னா நீங்க மும்பைக்கு வரணும். டெல்லில உக்காந்துக்கிட்டு இன்ட்டர்நெட் மூலமாவே எத்தனை நாளைக்கு காதலிச்சிட்டிருப்பீங்க...?
எப்போ வரட்டும்...?
எனக்கு இப்பவே உங்களைப் பார்க்கணும் போலத்தான் இருக்கு...
இதுதான் உன் ஆசைன்னா நிறைவேற்ற நான் தயார்...
என்ன விளையாடறிங்களா...? எப்படி டெல்லில இருந்து உடனே வருவிங்க...?
நான் இப்ப மும்பைலதான இருக்கேன்...
ஏய் தாமோதர்... ரியலி...?
எஸ்.ஜேக்கப் சர்க்கிள் பக்கத்தில் ஒரு இன்ட்டர்நெட் ப்ரௌசிங் சென்ட்டரில் இருந்து ச்சேட் பண்ணிட்டிருக்கேன்...
தாமோதர்...நீங்க ஏமாத்தலையே...?
ஐ எஸ் ஓ 2000 நிஜம்...
அஃபிஷியலா இங்கே வந்திங்களா...?
நோ... நோ... ப்யூர்லி பர்சனல்...
பர்சனல்...?
ஆமா... நான் மட்டுமில்லை... என்னோட அம்மா அப்பாவும் என்கூட வந்திருக்காங்க...
எதுக்கு...?
எனக்கு மும்பைல பொண்ணு பார்க்கப் போறாங்க...
ச்சேட் பாக்சில் விழுந்த எழுத்துக்களைப் பார்த்து மிருதுளா அதிர்ந்தாள்.
தாமோதர்... ஆர் யூ ஜோக்கிங்...?
நோ...நோ... ஸீரியசாய்த்தான் பேசறேன்...
அப்போ நான்...? சும்மா இன்ட்டர்நெட்ல அரட்டை அடிக்கறதுக்கு மட்டும்தானா...?
உனக்கு ஏன் இவ்வளவு கோபம் மிருதுளா...?
தாமோதர்... இன்ட்டர்நெட்ல எவ்வளவு ஆசை வார்த்தைகள் பேசியிருப்பிங்க...? உருகி உருகிக் காதலிச்சிங்க... எல்லாம் வெறும் பொழுது போக்குத்தானா...?
அவசரப்படாதே... பொண்ணு யார்ன்னு தெரிஞ்சிட்டு அப்புறமா கோபப்படு... உன்னைப் பார்க்கத்தான் வந்துட்டிருக்கோம்...
தா...தாமோதர்...? என்ன இப்படி ஒரு ப்ளெஸண்ட் ஷாக் குடுக்கறீங்க... உங்க அம்மாவும், அப்பாவும் இப்போ என்னைப் பார்க்க வரப் போறாங்களா...?
ஆமா... ரெண்டு நாளைக்கு முன்னால எங்க வீட்டில் கல்யாணப் பேச்சு எழுந்தது... நம்ம காதல் விவகாரத்தை உடைச்சு சொல்லிட்டேன்... அப்பாவும், அம்மாவும் உன்னைப் பார்க்கணும்ன்னு - விருப்பப்பட்டாங்க... ஸர்ப்ரைஸா போகலாம்ன்னு அவங்க சொன்னாங்க... நான்தான் இப்ப அவசரக் குடுக்கை மாதிரி நாங்க வரப்போற மேட்டரை டைப் பண்ணிட்டேன்...
எப்ப வர்றிங்க...?
ஹோட்டல் ரூமில் அம்மாவும், அப்பாவும் குளிச்சு ரெடியாயிட்டு இருக்காங்க. அவங்க புறப்பட்டவுடனே டாக்சி பிடிக்க வேண்டியதுதான்...
அய்யோ... எனக்குக் கையும் ஓடலை... காலும் ஓடலை...
ஏன்...
திடீர்ன்னு அவங்களைக் கூட்டிட்டு வந்துட்டிங்க... ஒரே டென்ஷனா இருக்கு...
"எதுக்கு டென்ஷன் ஆகணும்...? கேஷுவலா உன்னைப் பார்க்கணும்ன்னுதான் அவங்க பிரியப்பட்டாங்க... அதனால பீ கேஷவல்... இன்னும் கொஞ்ச நேரத்தில் நேர்ல பார்க்கலாம். பை.’’
ச்சேட் அறையிலிருந்து விடைபெற்றுக் கொண்டான் அவன்.
கம்ப்யூட்டரை அணைத்த மிருதுளாவின் மனசுக்குள் படபடப்பு அடங்க மறுத்தது.
2
டிசம்பர் 31, 1999.
இரவு பதினொரு மணிக்கு மும்பை சிவில் ஏர்போர்ட்டின் ஒரு பகுதி ஏராளமான உற்சாகத்தில் மிதந்து கொண்டிருந்தது.
பத்துக்கு இருபது ஹால் பூராவும் பலூன்கள் தொங்கின. ஜிகினா பேப்பர்கள் பல கலர்களில் மினுமினுத்தன.
HAPPY NEW YEAR 2000
என்று சொன்ன பேனர்கள் ஆங்காங்கே காற்றில் ஆடின.
ஊழியர்கள் பேவரேஜ்கள், கேக்குகள் போன்றவற்றை கேஸ்களில் சுமந்து – தூரத்தில் ‘பார்க்கிங் பே’ல் நின்றிருந்த விமானத்தில் கொண்டு போய் வைத்துக் கொண்டிருந்தார்கள்.
சீஃப்
கமேண்டர் விக்ரம்சிங் முழங்கால் வரை தொங்கும் ஒவர் கோட் பாக்கெட்டில் கையை நுழைத்தபடி – ஹாலில் குழுமியிருந்த ஒரு பிரிவு ஏர்போர்ட் அலுவலர்களைப் பார்த்து